தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட நடிகை சங்கீதா, பிதாமகன் மூலம் கோடம்பாக்கத்துக்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் அவர் நடித்த உயிர் படம் அவருக்கும் தமிழ் சினிமாவில் மீண்டும் உயிர் கொடுத்தது. த்ரிஷாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான இந்த சங்கீதா, த்ரிஷாவைப் போன்றே உற்சாகத்துடன் வாழ்க்கையை கழிக்க விரும்புபவர். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு என்று அறிவித்து விட்டு, ஒரிரு ஆண்டுகளில் மீண்டும் கணவர் சம்மதத்துடனோ அல்லது கணவரை விவாகரத்து செய்து விட்டோ மீண்டும் வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளுக்கு மத்தியில் அம்மணியின் பாலிஸியே வேறு. இளமை இருக்கும்போதுதானே அதா காட்டி சம்பாதிக்க முடியும் ; இது எனக்கு ஓய்வெடுக்கும் வயது இல்லை... என்று கூறி தொடர்ந்து நடித்து வருகிறார்.
கல்யாணத்திற்கு பிறகும் இவருக்கு வாய்ப்புகள் வருகிறது என்றால், அது இவரே ஏற்படுத்தி வைத்திருக்கிற நெகட்டிவ் இமேஜால் மட்டும்தான்! உயிர் படத்தில் தொடங்கி அண்மையில் வெளிவந்த மன்மதன் அம்பு வரைக்கும் சங்கீதாவை ரசிப்பதும் அந்த செக்ஸி லுக்குக்காகதான். தற்போது அம்மணி, டைரக்டர் புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கும் புகழேந்தி, இந்த படத்தில் சங்கீதாவுக்கு முக்கிய கேரக்டரை ஒதுக்கியிருக்கிறாராம். படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சங்கீதா தொடர்பான ஒருநாள் சூட்டிங் மட்டும் பாக்கி இருந்ததாம். அந்த நேரத்தில்தான், நான் ஃபாரின் போகணும் என்று கிளம்பிவிட்டாராம் சங்கீ. அதுவும் வர்றதுக்கு ஒரு மாசம் ஆகும் என்று கூறிவிட்டு! முன்னாடியே சொல்லியிருந்தால் அந்த ஒரு நாள் ஷ§ட்டிங்கை முடிச்சிருப்பேன். இப்போ வந்து சொல்றீங்களே என்று பதறிவிட்டாராம் இயக்குனர். ஆனாலும் டூரை கேன்சல் செய்யவில்லை சங்கீதா. பாவம்... டைரக்டர் புகழேந்திதான் சங்கீதாவின் ஒரு நாளுக்காக காத்திருக்கிறார்.
No comments:
Post a Comment