எனக்கு எந்த பதவிக்கும் வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. கட்சித் தொண்டர்களிடம் இப்போதுள்ள "அண்ணி' என்ற பதவியே போதும் என, பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா,
விஜயகாந்த் மீதான விமர்சனத்தை மக்கள் யாரும் நம்பவில்லை. மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமே விமர்சனம் செய்பவர்களுக்கும், அவருக்கும் உள்ள வித்தியாசம். தோல்வியின் வெளிப்பாடே இப்படி தனிமனித விமர்சனமாக வருகிறது.
அவர் சாதாரணமாக பேசுவதுகூட விமர்சிக்கப்படுகிறது. ஓட்டுக்களை சிதறடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.
தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிடுவதால், இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதிக தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் அதிக பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
எனக்கு எந்த பதவிக்கும் வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. கட்சித் தொண்டர்களிடம் இப்போதுள்ள "அண்ணி' என்ற பதவியே போதும். ரிஷிவந்தியம் தொகுதியில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். நான் அங்கு மூன்று நாட்களும், விஜயகாந்த் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார் என்றார்.
No comments:
Post a Comment