ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தேர்தல் ஆணையம் பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும் என, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.
இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தொண்டர்களைவிட, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுஇடங்களில் அநாகரிகமாக நடந்து வருகிறார். அவர் வைத்திருக்கும் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஆனால் அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் பாட்டில் சின்னம் ஒதுக்க வேண்டும். குடித்து விட்டு பிரச்சாரம் செய்கிறார். விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவர் ஒரு ஜானி வாக்கர் என்றார்.
No comments:
Post a Comment