பசுமை புரட்சி என்ற அமைப்பை தொடங்கி, அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் நடிகர் விக்ரம். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய அமைப்பு பற்றி விக்ரம் கூறுகையில், நடிகராகவும், நல்ல மனிதராகவும் இந்த சமுதாயம் என்னை உயர்த்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இளைஞர் நலத் தூதுவராக நியமிக்கப்பட்டதற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே செய்து வரும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு இந்த இடம் உதவியாக இருக்கும். பச்சைப் புரட்சி அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் எனது முதல் லட்சியம். அதற்கான பணிகளை இன்றே தொடங்கிவிட்டேன். இதைத்தொடர்ந்து குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கு சில உதவிகளை செய்ய இருக்கிறேன். இதற்கு சக நடிகர்களையும், ரசிகர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவேன். விரைவில் "கற்க கசடற என்ற புதிய அமைப்பையும் தொடங்க இருக்கிறேன். குடிசைவாழ் குழந்தைகளின் கல்வியை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது. எனது திரைப்படங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திரம், கேரளத்திலும் நலத்திட்டப் பணிகள் தொடங்கப்படும், என்றார்.
சமூக நலப்பணிகளில் அதிக அக்கரை காட்டுவது அரசியலுக்கு அஸ்திவாரமா? என்று விக்ரமிடம் கேட்டால், எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

No comments:
Post a Comment