ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இந்த வழக்கில் கனிமொழி எம்.பியும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி கனிமொழி நேற்று முன் தினம் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அவரது சார்பில் பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.
அவர், ‘’கனிமொழி ஒரு பெண் எம்.பி. என்பதாலும், அவருக்கு இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லைஎன்பதாலும், ஸ்பெக்டரம் விவகாரத்தில் முழுக்க முழுக்க ஆ.ராசாதான் சம்பந்தப்பட்டுள்ளார். ஆகவே கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
நேற்றும் கனிமொழி கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது சிபிஐ தரப்பு தனது வாதங்களை சொன்னது. ‘’ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசாவுக்கு சரிவிகிதத்தில் கனிமொழிக்கும் சம்பந்தம் உண்டு. சம்பந்தம் இல்லை என்று போலியான ஆவணங்களை கொடுத்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்’’ என வாதம் செய்தது.
இதையடுத்து நீதிபதி ஓ.பி.சைனி, ‘’பாண்ட் பத்திரம் மீது ஜாமின் வழங்குவதா அல்லது ரிமாண்ட் செய்துவிட்டு பிறகு ஜாமின் கோரப்பட்டு அதன்பிறகு விடுதலை செய்வதா என்பது குறித்து, வரும் 14ம் தேதி, தீர்ப்பை அளிக்கிறேன்.
அதுவரைக்கும், வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, கோர்ட்டுக்கு தினமும் வந்து, காலை முதல், மாலை வரை இருக்க வேண்டும்’’ என்று கனிமொழிக்கு உத்தரவிட்டார்.
இதனால் கணவர், மகனுடன் டெல்லியேலேய் இருக்கிறார் கனிமொழி. திமுக எம்.பிக்கள் சிலரும், ராஜாத்தி அம்மாளும் டெல்லியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் திமுகவில் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
‘’ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன்.
கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண் என்ற முறையில் இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.
இன்றைய செய்திகள்....
- என் வாழ்க்கையும் ஒபாமா வாழ்க்கையும் ஒன்று: மல்லிகா...
- விக்ரம் நடிக்கும் வேந்தன்!
- மே 12ல் திரைக்கு வருகிறது அழகர்சாமியின் குதிரை!
- இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டு
- மேக்-அப் இல்லாமல் நடிக்க அமோகா ஆசை!
- ரசிகர்கள்தான் எல்லாமே...! நடிகர் ஜீவா நெகிழ்ச்சி!!...
- அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேட...
- நான் கனிமொழிக்கு ஆதரவாக இருக்கிறேன் : நடிகை குஷ்ப...
- பின்லேடனைப்போல் ஐநா அறிக்கையும் கடலில் வீசப்பட்டு...
- ரஜினிகாந்த் குணமடைய ரசிகர் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்...
- இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை
- கைதியுடன் ஒரு நாளை செலவிட்ட நடிகை ஷெபாலி ஷா
- அத்தனை கண்களும் கங்குலியை நோக்கி!
- ஒசாமா பதுங்கியிருந்த வீடு (படங்கள்)
- இதியாவை தாக்க தயாராகிறது : இந்திய எல்லையில் பாகிஸ்...
- காஷ்மீருக்குள் ஊடுருவ 700 தீவிரவாதிகள் தயார்: மத்த...
- 'பின்லேடன் மரணத்தால் ஆப்பிரிக்காவுக்கு அபாயம்'
- கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக த...
- தேர்தல் முடிவு குறித்து கலக்கத்தில் உள்ளன திமுகவும...
- அல்கொய்தா அமைப்புக்கு ஜவாகிரி தலைவர் ஆகிறார்
- எம்.பிக்களின் சொத்துப் பட்டியலை வெளியிட முடியாது-ர...
- 6 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன், ஜவாஹிரி பிரிந்து ...
- ஜெயம் ரவி வெப்சைட் : வாரம் ஒரு முறை லைவ் சாட்டிங்
- அன்னா ஹசாரேவுக்கு எதிராக வழக்கு
- கம்யூனிஸ்டுகள் மீது கருணாநிதி தாக்கு
- புதிய ஒசாமா பின்லேடன் வீடியோ பதிவை வெளியிட்டது அமெ...

No comments:
Post a Comment