சூனியக்கார மைண்ட் இருக்கிற நபர்களையெல்லாம் சகுனின்னு செல்லமாகவோ, அல்லது டெரராகவோ அழைப்பதுதான் நமது வழக்கம். குறுக்கு புத்தி என்று விளக்கமாகவும் அழைக்கலாம் இந்த சகுனியை. அப்படியாப்பட்ட சகுனியே ச'கூனி'ப்போகிற அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறாராம் படத்தின் நாயகி ப்ரணிதா.
பார்க்கறதுக்குதான் பஞ்சுமிட்டாய். உதவி என்று போனால் யாராலும் நொறுக்க முடியாத பொரிவிளங்கா உருண்டையாக இருக்கிறதாம் அவரது மனசு. அப்படியென்ன பிரச்சனை சகுனி யூனிட்டிற்கு? அதுவும் இந்த அழகு வழியும் அப்சரஸ் மிட்டாயால்?
விசாரித்தால் அத்தனையும் பொய்யா, நிஜமா என்றே புரியாதளவுக்கு குழப்பம். இவர் தொடர்பான எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்து அனுப்பிவிட்டார்களாம். அதன் பின்தான் சில காட்சிகளை ரீ ஷூட் பண்ணினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியிருக்கிறது. வேறு வழியில்லாமல் இவரை அழைத்தபோது, நான் இப்போ ரொம்ப பிஸி. கூப்பிடும்போதெல்லாம் வர முடியாதுங்க என்கிறாராம்.
அப்படியாப்பட்ட பொண்ணு இல்லைங்க அது. இந்த படம் வந்தால்தான் தமிழில் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைக்கும். அப்படியிருக்கும் போது எப்படி இப்படி ஒரு பதிலை சொல்வாங்க? இந்த நியூசே பொய் என்றும் சப்பை கட்டு கட்டுகிறார்கள் ப்ரணிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
No comments:
Post a Comment