நடிகர் விக்ரம் மற்றும் திரிஷா நடித்து வெளிவந்த படம் “சாமி”. இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்தியில் ரீமேக் செய்கிறார்.
இந்தியில் கே.எஸ்.ரவிகுமார் எடுக்கும் முதல் படம் இது. கொலைவெறி பாடலுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பை உணர்ந்த கே.எஸ்.ரவிகுமார் இசையமைப்பாளர் அனிருத்தை இந்த படத்திற்கு இசையமைக்க கேட்டுள்ளார்.
போலீஸ் கதாபாத்திரத்தில் ஹீரோ நடித்துள்ள காக்க காக்க, சிங்கம் படங்களை சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்து இரண்டு படங்களும் வெற்றி பெற்றதன் விளைவாகக் கூட இந்த முடிவு இருக்கலாம். தற்போது இயக்குனர் கோச்சடையான் பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
No comments:
Post a Comment