பில்லா 2' படத்தினை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் " எனது அடுத்த தயாரிப்பிற்கு நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனை ஒப்பந்தம் செய்து உள்ளேன். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. அனுஷ்கா நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் மற்ற படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளதால் அவரால் இப்படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது. இப்படம் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும்.
'பில்லா' படத்தில் அஜீத்தை வித்தியாசமாக காட்டிய விஷ்ணுவர்த்தன், இப்படத்தில் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இப்படம் வரவேண்டும் என்று முனைப்புடன் பணியாற்றி வருகிறார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமானதாக இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment