ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ய இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வழங்கப்பட்டதாகவும், இந்திய வீரர்கள் சிலருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது.
மும்பை குற்றப்பிரிவு போலீசாரிடம் கிரிக்கெட் புக்கிகளில் ஒருவரான சோனு யோகேந்திர ஜலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமையன்று இவரையும் பையாஜி என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. உலகில் நடக்கும் மிகப் பெரிய கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்புடைய புக்கிகள் இருவருமே. இவர்கள்தான் கிரிக்கெட் வீரர்களை அணுகி பல கோடி பேரம் பேசி, ஒரு அணியை ஜெயிக்க அல்லது தோற்க வைக்கும் கருவிகள்.
இவர்களிடமிருந்து 25 மொபைல்போன்கள், லேப்டாப்கள், ரூ 5 லட்சம் ரொக்கம் உள்பட பறிமுதல் செய்தனர்.
சோனு மற்றும் கோத்தாரி பெட்டிங் நெட்வொர்க்கில் ரூ 500 கோடி வரை புழங்குகிறதாம். இதை கட்டுப்படுத்துபவர் பாகிஸ்தானில் உள்ள தாதா சோட்டா ஷகீல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, சவூதி என இவர்களின் வாடிக்கையாளர்கள் உலகம் எங்கும் நிறைந்துள்ளனர். இதுபோல பல பெட்டிங் நெட்வொர்க்குகளில் பல ஆயிரம் கோடி புழங்குகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் சோனு யோகேந்திர ஜலனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர் போலீசார். அந்த வாக்கு மூலத்தில், இலங்கை வீரர் ஒருவருக்கு ரூ 10 கோடி வரை மேட்ச் பிக்ஸிங்கு தரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் சிலருக்கும் இந்த பெட்டிங் நெட்வொர்க் மற்றும் பிக்ஸிங்கில் தொடர்புள்ளதாக சோனு கூறியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இன்னும் என்னென்ன பூதங்கள் புறப்பட உள்ளனவோ!!

No comments:
Post a Comment