ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி.,தேர்வுக்கு எம்.எல்.ஏ.,க்கள் தலா ஒரு கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக சந்தேகிக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் காலியாக கிடக்கும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் நிரப்பும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போடுவர். இதன் அடிப்படையில் ஜார்கண்டில் ராஜ்யசபா எம்.பி.,க்கு சுயேச்சையாக ஒருவர் போட்டயிட்டார். இவர் எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ஒரு கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தன. இதனைதொடர்ந்து இங்கு எம்.பி.,தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக சி.பி.ஐ.,அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள 15 எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பேரத்தில் காங்கிரஸ், மாநிலத்தில் ஆளும் ஜார்கண்ட்முக்தி மோர்ச்சாமற்றும் ராஷ்டிரியஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி பல கோடிகளை பறிமுதல் செய்தனர்.

No comments:
Post a Comment