புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்களிப்பதையும் தவிர்க்குமாறு அந்தக் கட்சித் தலைமை உத்தரவிடும் எனத் தெரிகிறது.
ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இத்தொகுதியில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து திமுக யாரை ஆதரிக்கும்? என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய நிலையில் தேமுதிகவை ஆதரித்துதான் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. திமுகவும் எதிர்காலக் கூட்டணியைக் கருத்தில் கொண்டு இதற்கு ஓகே சொன்னாலும் திமுக வாக்குகள் தங்களுக்குத் தேவை இல்லை என்பது தேமுதிகவின் நிலையாக இருக்கிறது.
இதனால் அதிருப்தியடைந்த திமுக யாருக்குமே வாக்களிக்காமல்விட்டுவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
திமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்று. கடந்த பொதுத் தேர்தலிலும் அதிமுக இங்கு குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிப் பெற முடிந்தது.
இத்தொகுதியில் 49 ஓ வை பயன்படுத்தலாம் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியதையும் திமுக தலைமை நிராகரித்திருந்த நிலையில் வாக்குப் பதிவை திமுக புறக்கணிப்பது உறுதியாகி உள்ளது.

No comments:
Post a Comment