கருப்பு பணம் ஐ.பி.எல் விளையாட்டில் முதலீடு செய்யப்படுவதால் இவ்விளையாட்டு தற்போது 'கருப்பு விளையாட்டு' என ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசியபோது குற்றம் சாட்டினார்.
கருப்பு பணத்திற்கு எதிராக ராம்தேவ் 'ரோட் ஷோ' நடத்தி வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு குற்றம் சாட்டிய அவர், இது முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.
300 நேர்மையான எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் நம்நாடு பல தீய சக்திகளிடமிருந்து விடுதலை பெரும் என தெரிவித்த அவர். சில நேர்மையான எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மறைவிடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணம் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் எனவும், அப்படி திருப்பி கொண்டு வரப்பட்டால் நாட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விடும் எனவும் தெரிவித்த அவர், மாவோயிஸ்டுகளும் கருப்பு பணம் கொண்டே ஆயுதங்கள் வாங்குவதாகவும் குற்றம் சாட்டினார்

No comments:
Post a Comment