திருக்கோவிலூரை அடுத்த அந்திலி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38), கூலி தொழிலாளி. நேற்று பிற்பகலில் இவர் அரகண்டநல்லூர் ரெயில் நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்துது.
எனினும் உயிரை மாய்க்க முயன்ற சக்திவேலை கண்ட பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் சக்திவேல் கீழே இறங்க மறுத்தார். இதனிடையே அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் சக்திவேலை சமாதானப்படுத்திட முயன்றும் பலனில்லை.
எனவே அவரை மீட்க அதிகாரிகள் முயற்சித்தனர். அதனையறிந்த சக்திவேல் மின்கம்பத்தில் கைலியால் தூக்குப்போட்டு கொண்டதால் பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்தபகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் மின்கம்பத்தில் ஏறி சக்திவேல் கழுத்தில் இறுகிய கைலியை கத்தியால் அறுத்துவிட்டனர். இதனால் உயரத்தில் இருந்து கீழே விழுந்த சக்திவேலை தீயணைப்பு வீரர்கள் விரித்து வைத்திருந்த தார்ப்பாய் உதவியுடன் காப்பாற்றி மீட்டனர்.
உயிர்தப்பிய சக்திவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சக்திவேல் மது குடிக்கபணம் கேட்டபோது அவர் தந்தை மறுத்து விட்டதே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என தெரியவந்தது.
சமயோசிதமாக செயல்பட்டு சக்திவேலை காப்பாற்றிய 3 வாலிபர்களுக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

No comments:
Post a Comment