முன்னாள் தலைமை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அஜீத் பிரகாஷ் சிங், கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடுபவர்கள் மீது தேச விரோத வழக்குகள் போடுவது குறித்து தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்ய முயற்சி மேற்கொள்ளபோவதாக தெரிவித்தார்.
மாநில மனித உரிமை கமிஷன் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என தன் கவலையை தெரிவித்த அவர், இப்பிரச்சினையை தேசிய மனித உரிமை கமிஷன் பார்வைக்கு எடுத்து செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், திருநெல்வேலியில் சுமார் 70,000 அணுஉலையை எதிர்த்து போராடுபவர்கள் கூடி போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதில் தான் கலந்து கொண்டு உரையாற்ற விருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment