தமிழ்த் திரையுலகை தனது இசையால் கட்டிப் போட்டவர்களில் வரிசையில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனுக்கு உண்டு. அவரது மனைவி திரு. ஜானகி அம்மாள் (வயது 74) உடல்தலக் குறைவு காரணமாக இன்று மாலை 4 மணிக்கு மரணமடைந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி, ஜானகி அம்மாள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவரது உடல்நிலை, இரண்டரை மாதங்களுக்கு முன் மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து. சென்னை ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று மாலை, 4.10 மணிக்கு இறந்தார். அம்மாவின் இறுதிச் சடங்கு, நாளை நண்பகல் 11. 30 மணிக்கு, பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்க இருக்கிறது. இவரின் இறுதிச் சடங்கில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இத்தம்பதியினருக்கு கோபி, முரளி, பிரகாஷ், ஹரி என நான்கு மகன்களும் லதா, மது, சாந்தி என மூன்று மகள்களும் உள்ளனர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, மாலை மலர் இணையதளம் அதன் வாசகர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது."
No comments:
Post a Comment