'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி. ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்தார்.
சேட்டை, வாலு, வேட்டை, மன்னன் என நான்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஹன்சிகா குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதனால் நடனம் ஆட வரவில்லை என்றும் கிசுகிசு பரவியது.
இதையடுத்து உடல் எடையை நவீன சிகிச்சை மூலம் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு சில நாட்கள் தங்கி உடல் எடை குறைப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகிறாராம். உடம்பை ஒல்லியாக்கி விட்டு இந்தியா திரும்புகிறார். இந்த சிகிச்சைக்கு பின் ஹன்சிகா இன்னும் அழகாக பிரகாசிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment