முறைகேடாக அரசு நிலம் ஒதுக்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறித்திய அரசு அதிகாரி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி நேர்மையான அதிகாரிகளை பாதுகாப்பது அரசின் கடமை என்று தெரிவித்தார்.
மேலும் நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் மீதும் காவல் துறையினர் மீதும் நம்பிக்கை இல்லை என்றால் அவர்கள் தங்கள் கடமையை செய்யமுடியாது என்றும் நாம் நீதியை எதிபார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
நிர்வாக சேவை அதிகாரி எஸ்.பி.மகந்தேஷ் (48) மர்ம நபர்களால் தாக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் இறந்து விட்டார். மகந்தேஷ் மாநில கோ-ஆபரேட்டிவ் டிபார்ட்மெண்டில் ஆடிட் பிரிவில் பணியாற்றி வந்தார்.
தன் துறையில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து ஈடுபட்ட முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment