இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறபோவதாக சென்னை நிருபர்களிடம் சூசகமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தோனி கூறியதாவது:-
அடுத்த ஆண்டு எனது உடல்தகுதி எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவதா இல்லையா என்பது பற்றி முடிவு செய்ய முடியும். உடல் தகுதி பெறாவிட்டால் இளைஞர்களுக்கு வழிவிடுவேன்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகியவற்றில் ஒரு நிலையில் தான் என்னால் விளையாட முடியும். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஆடுவேன். உடல் தகுதியை பொறுத்துதான் எல்லாம் இருக்கும். 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவதை விரும்புகிறேன்.
இவ்வாறு தோனி கூறியுள்ளார்.
டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக தோனி கருத்து தெரிவிப்பது 3-வது முறையாகும். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக்கொண்டி இருக்கும் போது தோனி 2015 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் அடுத்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று தோனி கூறி இருந்தார். அதேபோல மீண்டும் ஒரு முறை கூறி இருந்தார். தற்போது 3-வது முறையாக தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறபோவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
காரணம் இல்லாமல் இப்படி டெஸ்ட் ஓய்வு குறித்து தெரிவிக்க மாட்டார். டெஸ்ட் போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இங்கிலாந்து பயணத்திலும், ஆஸ்திரேலியா பயணத்திலும் அனைத்து டெஸ்டிலும் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாகவே தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்று நினைக்கிறார்.
ஒருநாள் போட்டியில் மட்டும் முழு கவனம் செலுத்த விரும்புகிறார். தோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, கடந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment