டேட்டா கார்டு இல்லாமல் ரயிலில் செல்லும் போது இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியினை இந்தியன் ரயில்வே துறை வழங்க உள்ளது.
டேட்டா கார்டு வசதி வந்த பிறகு, பயணங்களில் கூட இன்டர்நெட் தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடிகிறது. ஆனால் இந்த டேட்டா கார்டு இணைக்காமலேயே ரயிலில் பயணிக்கும் போது, இன்டர்நெட் பயன்படுத்த ஐஎஸ்ஆர்ஓ அமைப்பிடம் இருந்து (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்) ரயில்வே துறை அனுமதி பெற்றுள்ளது.
செயற்கைகோள் மூலம் இந்த இன்டர்நெட் வசதியினை ரயில்வே கூடிய விரைவில் வழங்கும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த இன்டர்நெட் வசதியை வழங்க, தற்பொழுது கவுரா ராஜ்தானி ரயிலில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயிலில் இந்த இன்டர்நெட் வசதியை கொடுக்க, ரயில்வே துறை ரூ.6.30 கோடியை வழங்கி உள்ளது.
இந்த ப்ராஜெக்ட் மும்பையை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டுவிட்டால் மற்ற ரயில்களிலும் இந்த இன்டர்நெட் வசதி வழங்கப்படும்.
No comments:
Post a Comment