இதுவரை ஒரே கமர்ஷியலாக கொடுத்து வந்த நடிகர் விஜய் நண்பன் படம் மூலம் தன்னுடைய நடிப்பை ஸ்டைலை மாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துவரும் படம், "துப்பாக்கி! கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதில், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து விஜய் நடிக்கும் படம், "யோஹன் அத்தியாயம் ஒன்று! கவுதம் மேனன் இயக்கும் இப்படத்தில், துப்பறியும் நிபுணராக தோன்றவுள்ள விஜய், பல கெட்டப்புகளில் நடிக்கிறார். உலக அளவிலான ஒரு பிரச்னையை படமாக்குவதால், இந்த படத்தின் படப்பிடிப்பை, அமெரிக்காவில் துவங்கி, பல முக்கிய நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ள கவுதம், படப்பிடிப்பை ஜூலையில் துவங்க இருக்கிறார். ஆக, "துப்பாக்கி, யோஹன் அத்தியாயம் ஒன்று ஆகிய இரண்டு மெகா படங்களையும் முடித்துவிட்டு, ஏ.எல்.விஜய் இயக்கும், "தலைவன் மற்றும் ராஜேஷ் இயக்கும் படங்களில் நடிக்க, கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். இதில், ராஜேஷ் இயக்கும் படம், முழு நீள காமெடியாக உருவாகிறது.

No comments:
Post a Comment