கோவையை அடுத்த ஈச்சனாரியில் கச்சியப்பர் மடாலயம் உள்ளது. இந்த மடத்தை கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு கணேசபரமதேசிக சாமிகள் நிறுவினார்.
அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் இவர் ஈச்சனாரிக்கு வந்தபோது சாதாரண கணேசன் என்ற பெயருடன் தான் வந்துள்ளார். ஒரு வாடகை வீட்டில் மனைவி, மகள்கள் பரமேஸ்வரி, ரமாபிரபா மற்றும் மகன் சடாட்சரவேலுடன் வசித்து வந்தார்.
குறிச்சி, ஈச்சனாரி பகுதிகளில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், பயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மந்திரித்து கயிறு கட்டி விடுவார் தொடர்ந்து, ஊர் பெரியவர்களின் உதவியுடன் பாலசுப்ரமணியர் எனும் பெயரில் ஒரு முருகன் கோவிலை அங்கு நிர்மாணித்தார் கணேசன்.
கோவில் கட்டுவதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த மாகாளி நாயக்கர் என்பவர் 50 சென்ட் இடத்தை தானமாக வழங்கினார். அந்த இடத்தில் தான் இப்போது மடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கணேசன் ஆசியால் வாதிகளைபோலவே மடத்தின் சொத்துக்ககளை பாதுகாபதற்க்காக கோவிலுக்கு அறங்காவலர் குழுவை அமைத்தார். அப்போது, ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த கணேசனின் மகன் சடாட்சரவேல் இளைய மடாமாக கொண்டுவரப்பட்டார். மற்ற படி தனது மனைவி மகள்கள், மருமகன் போன்றவர்களே அதில் பொறுப்புக்க வந்தனர்.
சடாட்சரவேலின் சகோதரிகளில் ஒருவரான பரமேஸ்வரி, வக்கீலுக்கு படித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், கணேசன் இறந்தார். இதையடுத்து, சடாட்சரவேல் மடத்தின் இளையபட்டமாக பொறுப்பேற்ருக்கொண்டார். மடாலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சடாட்சரவேலுக்கு (வயது-37) வந்தது.
பொறுப்புக்கு வருமுன்னரே திருமணம் நடந்துவிட்டது, இவரது மனைவி பெயர் செண்பகரத்தினம் வயது-32. இவர் சடாட்சரவேலுவின் மற்றொரு சகோதரி ரமாபிரபாவுடைய கணவரின் சகோதரியாவார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் மடத்துக்கு வந்த மாச்சநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்னுடன் நெருக்கம் அதிகமாகியுள்ளது. கடந்த மாதம் உலக நன்மைக்காக சடாட்சரவேலு 148 நாட்கள் தண்ணீர் மட்டுமே அருந்தி உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் ஒரு லட்சத்து எட்டு திருவிளக்கு பூசை வழிபாட்டையும் நடத்தினார்.
.இந்த பூசைக்கு முக்கிய காரணம், மாச்சநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த அந்த பெண்தான் என்று மதத்துக்குள் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.
ஆவார். இளைய மடத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த இந்தப் பெண்ணுக்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும், இந்த பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது மதத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்துள்ளது,
கடந்த இரு மாதங்களுக்கு முன், பரமேஸ்வரி மற்றும் இளைய மடத்தின் உறவினர்கள், அந்த பெண்ணிடம் பிரச்னையில் ஈடுபட்டனர். அவரால்தான், இத்தகைய செலவுகள் ஏற்பட்டது என, குற்றம் சாட்டினர். கோவில் உள்ள இடத்தை அந்தப் பெண் பெயருக்கு, சடாட்சரவேல் மாற்றிவிடுவாரோ என்ற எண்ணம், உறவினர்களுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்பட்ட பிரச்னையால் கடந்த சில வாரங்களாக, சடாட்சரவேல் மனமுடைந்து காணப்பட்டார்
நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு, சடாட்சரவேல் கடிதம் ஒன்றை எழுதி தனது உதவியாளர் பிரபுவிடம் கொடுத்தார். அப்போது, வெளியே சென்றிருந்த செண்பகரத்னம், மடத்துக்கு வந்து, வீட்டு வேலைகளில் ஈடுபட்டார். பின்னர் மடத்தினுள் சென்ற செண்பகரத்னம், தானும் ஒரு கடிதத்தை எழுதி, பிரபுவிடம் கொடுத்துள்ளார் நேற்று பிற்பகல் வரை சடாட்சரவேலு அவரது அறையை விட்டு வெளியே வரவில்லை.
மந்திரிப்பதற்காக வந்த பக்தர்கள் மடாலயத்தின் உள்ளே சென்று பார்த்தபோது சடாட்சரவேலுவும், அவரது மனைவி செண்பகரத்தினமும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகே குளிர்பான பாட்டில் கிடந்தது. குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரனை நடத்திவருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் 1 லட்சத்து 8 திருவிளக்கு வழிபாடு நடத்தியதில் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதாகவும், கடனை திருப்பித்தர முடியாமல் மனவேதனை அடைந்த சடாட்சரவேலு தனது மனைவியுடன் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment