வானம்' படத்தினைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன.
'போடா போடி', 'வேட்டை மன்னன்', 'வாலு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
அப்படங்களில் தற்போதைய ஸ்டேடஸ் :
'போடா போடி'யில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். படத்தை ஜுன் மாதத்தில் வெளியிடலாம் எனத் தெரிகிறது.
'வேட்டை மன்னன்' படத்துக்கு சென்னையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. வெளிநாட்டில் தான் மீதம் உள்ள அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட வேண்டும். பிரேசிலில் படம்பிடிக்க மிக நீண்ட ஷெட்டியூல் தயாராகி வருகிறது.
'வாலு' திரைப்படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் சம்பந்தப்பட்ட போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார்கள். அதற்கான விளம்பரங்கள் மற்றும் FIRST LOOK விரைவில் வெளியாக இருக்கிறது.
இப்போதைக்கு 'போடா போடி', 'வாலு', 'வேட்டை மன்னன்' என்கிற வரிசையில் தான் சிம்புவின் படங்கள் வெளிவரும்.
வெற்றிமாறன் - சிம்பு இருவரும் தங்களது பணிகளை முடித்த உடன் கண்டிப்பாக 'வடசென்னை'யில் இணைவார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
சந்தானத்தை விட பிஸியா இருக்காருபா சிம்பு!
No comments:
Post a Comment