தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக முதல்வர் பொறுப்பேற்ற ஓராண்டுச்சாதனை குறித்து பல்வேறு கட்சியின் பாராட்டி பேசினர்.
அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சித்தலைவர், அதிமுக கூட்டணியில் இருக்கும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் பேசும்போது, ஒரு பழமொழியைச்சொல்லி, அதற்கு உதாரணம் சொன்னார். அதாவது, எதிர்கட்சியினர் மக்கள் குறைகளை வெளியே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றும் விதமாக எங்கே வந்து பேசவேண்டுமோ அங்கே வந்து அவர்கள் பேசவில்லை என்று கூறினார்.
சரத்குமார் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்கள் எழுந்து கூச்சல் போட்டனர். சரத்குமாரை நோக்கி கையை நீட்டி ஆவேசமாக கத்தினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் ஆவேசமாக கத்தினார். அவரை நோக்கி பேரவைத்தலைவர் ஜெயக்குமார் சமாதானம் செய்து பேசினார். ஆனால், சந்திரகுமார் தொடர்ந்து கூச்சல் எழுப்பினார். இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, பேரவை உறுப்பினர் சரத்குமார், ஒரு பழமொழியைச்சொல்லி பெயர் குறுப்பிடாமல்தான் பேசினார்.
இதற்காக தேமுதிகவின ஏன் கொந்தளிக்கின்றனர் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் இங்கே தேமுதிக மட்டும்தான் உள்ளதா? எத்தனையோ கட்சிகள் உள்ளது. அப்படியிருக்க, தேமுகவினர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னார்.
இதையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து, ‘’எதிர்க்கட்சி என்றால் தேமுதிக மட்டும் இல்லை. 5 முறை ஆண்டவரும் இருக்கிறார், அவர் மகனும் இருக்கிறார். அப்பயிருக்க தேமுதிகவினரின் செய்கை மோசமானது’’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
அப்போதும் தேமுதிகவினர் கூச்சல் எழுப்பியதால், சபாநாயகர் ஜெயக்குமார், நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறீர்கள். இது சரியல்ல சந்திரகுமார் என்று கூறினார்.
பின்னர் பேசிய சரத்குமார், ‘’நான் யாரையும் பெயர் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அப்படியிருந்தும் கொந்தளிக்கிறார்கல் என்றால் குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். என்னை நோக்கி கை நீட்டி பேசுகிறார்கள். அதனால் எனக்கு கோபம் வராது. நான் மனிதாபிமான பண்பு உள்ள மனிதன்’’ என்று கூறினார்.
இதையடுத்து ஜெயக்குமார், உறுப்பினர் சரத்குமாரே சொல்லிவிட்டார். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையாம் என சமாதானம் செய்தார்.
No comments:
Post a Comment