உத்தரப்பிரதேசத்திலிருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ஜெயா பச்சன். இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஆவார்.
இவருக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் ஏற்கனவே மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரேகா மாநிலங்களவை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார்.
அவர் நேற்று மாநிலங்களவையில் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் பதவியேற்கும் போது ராஜ்யசபா டிவியில் ஜெயா பச்சனையும் காட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா பச்சன், ராஜ்யா சபா டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பு செயலாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அதில், ரேகா மேல்சபை எம்.பி.யாக பதவி ஏற்றபோது தன்னை தேவையில்லாமல் ராஜ்யா சபா டிவியில் காட்டியுள்ளனர் என கூறி உள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவைக்கு ரேகா தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு ஜெயா பச்சன் அருகே இருக்கை ஒதுக்கப்பட்டது. ஆனால், ஜெயா பச்சன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேறு இடத்தில் இருக்கையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment