தமிழில் தீ.நகர், மலையன் படத்தில் கரண் ஜோடியாக நடித்தவர் உதயதாரா. பிரசன்னாவுடன் கண்ணும் கண்ணும் மற்றும் விலை, பயமறியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
உதயதாராவுக்கும் துபாயில் விமான பைலட்டாக பணியாற்றும் ஜுபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. உதயதாரா-ஜுபின் ஜோசப் திருமணம் இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சின் அருகே நடந்தது.
திருமணத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று உதயதாரா கூறி இருந்தார்.
தற்போது கைவசம் இருந்த இரண்டு மலையாள படங்களை முடித்து விட்டார். அடுத்த வாரம் இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு செல்கின்றனர். ஓரிரு மாதங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது.
No comments:
Post a Comment