கோவாவில் பா.ஜ.க. அரசு 2005-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. இதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெற்றது. போலீஸ் அனுமதியின்றி நடைபெற்ற இப்போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்துக்கு தலைமை தாங்கிய சி.பி.சிங் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அப்போது சிங் மாநில சட்டசபை பா.ஜனதா தலைமை கொறடாவாக இருந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி வி.கே.மிஷ்ரா நேற்று தீர்ப்பு கூறினார். சி.பி.சிங்கிற்கு 1 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட சி.பி.சிங் தற்போது ஜார்கண்ட் சட்டசபை சபாநாயகராக இருக்கிறார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிங் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஷ்ரா அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கினார்.
No comments:
Post a Comment