அணு சக்தி உலைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது தனது அரசின் தலையாய கடமை என்று தெரிவித்த பிரதமர் மன் மோகன் சிங், அணுசக்தி முழுவதும் கைவிடுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறினார்.
அணு உலை பாதுகாப்பு விசயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என தெரிவித்த பிரதமர், நாட்டில் தற்போது 19 அணு உலைகள் இயங்கி வருவதாகவும் இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
புகுசிமா விபத்திற்கு பின் நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மீண்டும் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்ய செய்ததாகவும் அவ்வறிக்கை அணு சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்.) இணைய தளத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கூடுதல் மின் சக்தி, அணு சக்தி மூலம் பெறலாம் எனவும், இந்தியா ஜப்பான் நாட்டைப்போன்று இல்லை என்றும் கூறினார். ஜப்பான் நாடு பெரும்பாலான மின் சக்தியை அணு உலையிலிருந்து பெறுகிறது என்றார். மேலும் பிரான்ஸ் நாட்டிலும் நிறைய அணு உலைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment