மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்கக் கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோகக் கூடிய விஷயங்கள் அதிகம் உள்ளன. இந்த முடிக்கான பிரச்சினை இப்போது தேவை தானா? இது குறித்து நான் ஆதீனத்திடம் கூறினேன். அதற்கு அவர் "நீங்கள் தலைமுடியுடன் பிரபலம் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு அந்த முடிதான் டிரேட் மார்க். அதனை எடுக்க வேண்டாம்" என்றார் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
இதுகுறித்து நேற்று மதுரை ஆதீன மட வளாகத்தில் செய்தியாளர்களிடம் நித்தியானந்தா பேசுகையில்,
மதுரை ஆதீனமாக சைவ வேளாளர் குலத்தை சோந்தவர் தான் வர முடியும் என்று கூறுகிறார்கள். நானும் அதே வகுப்பை சேர்ந்தவன் தான். (அப்போது, மதுரை ஆதீனம் குறுக்கிட்டு ஏற்கனவே 289, 290-வது ஆதீனம் உள்பட 7 பேர் தொண்டை மண்டல முதலியார் வகுப்பை சார்ந்தவர்கள் தான் ஆதினமாக பொறுப்பேற்று உள்ளனர். நித்தியும் அதே வகுப்பை சார்ந்தவர்கள் தான் என்றார்).
மூன்றரை லட்சம் கற்பழிப்பு வழக்ககுள்...
பொது வாழ்க்கையில் யார், யார் மீதும் வழக்கு தொடரலாம். இந்தியாவில் மூன்றரை லட்சம் கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அந்த வழக்கில் சில பெண்கள் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். இல்லையென்றால் பெண்ணின் பெயர் மாற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் என்மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த பெண்ணின் பெயரும் இல்லை.
என் மீதான தாக்குதல் இந்து மதத்தின் மீதான தாக்குதல். நான் இந்து மதத்திற்கும், சைவ சமயத்திற்கும் அரும்பணி ஆற்றி வருகிறேன். பல புத்தகங்கள் மூலமும் இந்து மதக் கொள்கைகளை பரப்பி வருகிறேன். உலகில் அதிக ஆன்மிக கருத்துகளை பரப்புபவர்களில் நான் முதலிடத்தில் உள்ளேன். இதை பெருமையாகச் சொல்லவில்லை. 10 ஆயிரம் மணி நேரம் ஆன்மிகம் பற்றி பேசி உள்ளேன். இதற்காக வருகிற ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளேன். இப்படி சேவை செய்கிற எனக்கு ஆதீனங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவதூறு பரப்புவது வேதனை அளிக்கிறது.
என் சீடரைத்தான் சொன்னேன்...
நான் ஆன்மிகப் பணி செய்ய வந்துள்ளேன். மதுரை ஆதீனமாக வரவேண்டும் என்று கூறும் போது நான் 4 முறை மறுத்தேன். எனது சீடர் ஞானசொரூபானந்தா ஆதீனமாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் ஆதீனம் அதை ஏற்க வில்லை. புகழுக்காகவோ, சொத்துக்காகவோ மதுரை ஆதீனமாக நான் வரவில்லை. எனக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கிறது.
தற்போது என்மீது புகார் கூறியுள்ள ஆதீனங்கள் அனைவரும் எல்லா சொத்துக்களையும், மடத்தையும் விட்டுவிட்டு வெளியே வரட்டும். நானும் அதே போன்று வெளியே வருகிறேன். நான் வெளியே வந்த ஒரு மாதத்தில் என்னால் புதிதாக ஒரு பீடத்தை உருவாக்க முடியும்.
சொத்தை விற்க மாட்டேன்...
இப்போது பத்திரிகையாளர் முன்னிலையில் ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன். எக்காரணத்திற்கும் மதுரை ஆதீன சொத்துகள் விற்கப்பட மாட்டாது. அதற்கு எந்த இழப்பும் ஏற்படாது. மதுரை ஆதீனத்திற்கு மென்மேலும் சொத்துகள் வாங்கப்படும். மதுரை ஆதீனத்தின் பணிகள் விரிவுபடுத்தப்படும். நித்தி மடத்தின் சொத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதே போன்று ஆதீனத்தின் சொத்துகள் குறித்து பெரியவர் விருப்பம் தெரிவித்தால் வெளியிடப்படும்.
முடியை எடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார் ஆதீனம்
மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்கக் கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோகக் கூடிய விஷயங்கள் அதிகம் உள்ளன. இந்த முடிக்கான பிரச்சினை இப்போது தேவை தானா? இது குறித்து நான் ஆதீனத்திடம் கூறினேன். அதற்கு அவர் நீங்கள் தலைமுடியுடன் பிரபலம் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு அந்த முடிதான் டிரேட்மார்க். அதனை எடுக்க வேண்டாம் என்றார்.
ஜி.கே.மணி என்னை ஆதரிக்கிறார்...
என் மீதான புகார் சர்ச்சையில் இருந்து போரூர் ஆதீனம் விலகி விட்டார். எனக்கு ஆதரவாக அசோக்சிங்கால், ரவிசங்கர்ஜி, காஞ்சி பெரியவர், பாட்டாளி மக்கள் கட்சி ஜி.கே.மணி உள்பட 40 பெரிய சமூக அரசியல் தலைவர்கள் நட்புடன் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்து அமைப்பு என்ற பெயரில் லோக்கல் ரவுடிகள் தகராறில் ஈடுபட்டால் அதற்கு திருப்பனந்தாள் மடாதிபதிகள் தான் பொறுப்பு என்றார் நித்தியானந்தா.
No comments:
Post a Comment