ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீண்டும் கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் பலரும் சிறைக்குப் போகக் காரணமாக இருந்தவர் சுப்பிரமணிய சாமிதான். தற்போது ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது பற்றி அவர் கூறியுள்ளதாவது:
ராசாவுக்கு சட்டப்படிதான் ஜாமீன் கிடைத்திருக்கிறது. அவரால் இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித குறுக்கீட்டையும் செய்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் ராசாவின் பங்கு மிகச் சிறியதுதான். இன்னும் பெரிய திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதனால்தான் நான் சொல்லி வருகிறேன் ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று. அதான் அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் சாமி.
ஆ.ராசாவின் உயிருக்கு நிச்சயமாக ஆபத்து இருக்கிறது என்று அவர் ஜாமீன் தாக்கல் செய்தபோதும் சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவின் தற்கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment