பாலியல் புகாரில் சிக்கி கைதாகியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் லூக் போமெர்ஸ்பேச் எஞ்சிய நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் உரிமையாளர் விஜய்மல்லையா அறிவித்துள்ளார்.
லூக் போமெர்ஸ்பேச் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா, நடந்த சம்பவத்துக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். நேர்மையான விசாரணை நடைபெற முழுமையாக ஒத்துழைப்போம். நிச்சயமாக அவர் செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும்.
எஞ்சியுள்ள போட்டிகளில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக லூக் போமெர்ஸ்பேச் விளையாடமாட்டார் என்றார் அவர்.
டெல்லியில் அமெரிக்கப் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் லூக் போமெர்ஸ்பேச் இன்று காலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment