தனது மகள் ஜானவி நடிகையாவதை தான் விரும்பவில்லை என்று ஸ்ரீதேவி தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு,
நான் 4 வயதில் இருந்து படங்களில் நடிக்கிறேன். என் வாழ்க்கை ஷூட்டிங், ஸ்டுடியோ என்றே ஆகிவிட்டது. திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகும் முன்பு படங்களில் முழுக் கவனம் செலுத்தினேன். தற்போது மனைவியாக, தாயாக எனது கடமையை விரும்பி செய்கிறேன்.
எனது மூத்த மகள் ஜானவி படங்களில் நடிக்கப்போவதாகவும், ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் மகனுடன் நடிக்கப் போவதாகவும் வந்த செய்தியைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. நான் நடிகை என்பதால் என் மகளையும் நடிகையாக்க வேண்டும் என்றும், உடம்பை குறைக்க வேண்டும் என்றும் நான் கட்டாயப்படுத்துவதாக மக்கள் நினைப்பது வருத்தமாக உள்ளது. என் மகள் ஜானவிக்கு 15 வயது தான் ஆகிறது.
அவள் நன்றாகப் படிக்கிறாள். நான் தான் சிறு வயதிலேயே நடிக்க வந்தததால் படிக்க முடியாமல் போனது. எனது மகள்களாவது நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஜானவி நடிகையாவதை நான் விரும்பவில்லை என்றார்.
ஆனால் ஸ்ரீதேவி தனது மகளை 16 வயதில் திரையுலகில் அறிமுகப்படுத்த முயல்வதாகவும், நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலுடன் முதல் படம் என்றும் செய்திகள் வெளிவந்தன. அதிலும் ஜானவியை தெலுங்கில் அறிமுகப்படுத்துவதில் ஸ்ரீதேவி முனைப்பாக இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படம் மூலம் மீண்டும் பெரிய திரையில் தோன்றவிருக்கிறார்.
No comments:
Post a Comment