ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் இதுவரை அதிக பதக்கங்களை (18 பதக்கம்) பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் ரஷ்ய வீராங்கனை லரிசா லெட்டினா ஆவார். இவரது சாதனை கடந்த 56 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று முதல் கோலாகலமாக துவங்குகிறது. இதில் 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இது நவீன ஒலிம்பிக் போட்டிகளின் வரிசையில் லண்டனில் இந்த ஆண்டு நடைபெறுவது 30வது ஒலிம்பிக் போட்டியாகும்.
ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்றவர்களில் முன்னாள் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லெட்டினினாவின் சாதனை கடந்த 56 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் உள்ளது.
கடந்த 1934ம் ஆண்டு உக்ரைனின் கேர்சன் பகுதியில் பிறந்தார் லரியா. முதலில் பாலே விளையாட்டு வீராங்கனையாக இருந்த இவர், பயிற்சியாளர் இல்லாததால் ஜிம்னாஸ்டிக் விளையாட்டிற்கு மாறினார். லரியாவின் 20வது வயதில் சர்வதேச அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்றார்.
கடந்த 1954ம் ஆண்டு நடைபெற்ற ரோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். இதன்மூலம் கடந்த 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற லரியா, 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார்.
இதன்பிறகு 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற லரிசா, 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார். கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார். கடந்த 1966ம் ஆண்டோடு உலக ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் லரியா மொத்தம் 18 பதக்கங்களை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தனிப்பட்ட மற்றும் குழு விளையாட்டுகளில் கலந்து கொண்டு 18 பதக்கங்கள் இதுவரை யாரும் வாங்கவில்லை. அதேபோல லரிசா ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 9 தங்கப்பதக்கங்களை பெற்றார். ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப்பதக்கம் பெற்ற வீராங்கனை என்ற பட்டியலிலும் லரிசா தான் முதலிடத்தில் உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் பெற்றவர்களில் லரிசாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பில்ப்ஸ் 16 பதக்கங்களுடன் உள்ளார். இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment