தனுஷ் - சற்குணம் - அமலாபால் மூவரும் இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். படத்தின் பெயர் 'சொட்ட வாழக்குட்டி'. இப்படத்தினை 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தயாரித்த கதிரேசன் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு முன்பே இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்ன தெரியுமா?
'வாகை சூட வா' படத்தில் இனியாவின் வேடத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் அமலா பால் தான். ஆனால் சற்குணம் தொடர்ச்சியாக மொத்த தேதிகளையும் கேட்க, அமலா தன்னால் இப்போதைக்கு முடியாது என்று கூறவே இனியா நாயகியாக நடித்தார். அப்போதே தனது அடுத்த படத்தில் முடிந்தால் இணையலாம் என்று அமலாவிற்கு வாக்குறுதி அளித்தார் இயக்குனர் சற்குணம்.
" தனுஷ் - அமலா பால் இணையும் 3. " இது தான் 3 படத்திற்கு முதலில் வந்த விளம்பரம். பிறகு ஏற்பட்ட பிரச்னையால் 3 படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.
அமலா பால் தற்போது சற்குணம், தனுஷ் இருவரிடமும் விட்ட வாய்ப்பை ஒரே படத்தில் ஜெயித்திருக்கிறார்.
No comments:
Post a Comment