உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாயாவதி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கவும், போலீஸ் அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இனவாத மோதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பதற்றம் அதிகமாக உள்ள பகுதிகளில் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று உள்துறை செயலாளர் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
மேலும் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் போதிய விழிப்புடன் செயல்படாத குற்றச்சாட்டிற்காக அப்பகுதி புலனாய்வுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வி.பி.சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment