தமிழில் நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்து இந்திப் படங்களிலும் கலக்கியவர் ஸ்ரீதேவி. 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்தார். பின்னர் இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.
பல வருட இடைவெளிக்குப்பின் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலம் தெரியாத குடும்பத்தலைவி படும் அவஸ்தைகளே படத்தின் கதை. இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.
தமிழில் வெளியாகும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த்தை அணுகினர். ரஜினியும், ஸ்ரீதேவியும் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். ஆனால் ரஜினி உடல் நிலையை கருத்தில் கொண்டு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அஜீத்தை அழைத்துள்ளார். இது குறித்து 'இங்கிலீஷ் விங்கிலீஸ்' படக்குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கூறும்போது அஜீத்திடம் அவரவர் தோற்றத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார். அஜீத் இதில் நடிப்பார் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment