30-வது ஒலிம்பிக் போட்டி லண்டனில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தொடக்கம் மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சியில் வியக்கத்தக்க வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுவது வாடிக்கையாகும்.
இது தவிர போட்டி நடைபெறும் நாட்களில் இடைவேளையின் போது ரசிகர்களை கவர கலைநிகழ்ச்சி ஸ்டேடியங்களில் நடத்தப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள இளைஞர்கள் பல நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலைநிகழ்ச்சியில் தமிழக இளைஞர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களை சேர்ந்த இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் மியூசிக் பேண்ட், பரதநாட்டியம், கதக், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நமது கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள். டெல்லி, மும்பை இளைஞர்கள் பாங்ரா நடனம் ஆடுகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஜெய்கோ பாடலுக்கு சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவ-மாணவிகள் மேற்கத்திய நடனமாடி கலக்க இருக்கிறார்கள்.
இந்த கலைநிகழ்ச்சியில் மொத்தம் 79 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்திய கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் வருகிற 31 மற்றும் ஆகஸ்டு 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment