சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்றான்' படமும் தப்பவில்லை.
'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.
இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.
இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்றி என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.
இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே பிரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment