டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 21 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 4-வது ஆட்டம் கொழும்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்திய அணி 3-வது போட்டியில் ஆடிய அதே உத்வேகத்துடன் நாளை விளையாட வேண்டும்.
தொடக்க வீரர் காம்பீர் “பேட்டிங்” தொடர்ந்து சிறப்பாக உள்ளது. ரெய்னா, ஷேவாக் ஆகியோரும் பேட்டிங்கில் நல்லநிலையில் உள்ளனர். பவுலர்கள் இன்னும் சிறப்பாக வீசி ரன்னை கட்டுப்படுத்துவது அவசியம். ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்ய இந்த தொடரை வெல்வது இந்திய அணிக்கு அவசியமானதாகும்.
இலங்கை அணியை பொறுத்தவரை நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடரை சமன் செய்யும் வகையில் அந்த அணி வெற்றிக்காக போராடும். முன்னணி பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான சங்ககரா காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பாதிப்பே.
இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர்த்தனே, தரங்கா, மேத்யூஸ், தில்சான் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் பதிலடி கொடுக்கும் முனைப்பில் அந்த அணி உள்ளது. நாளைய ஆட்டமும் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment