லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி வாகை சூடுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 2100 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. டேவிட் வாட்கின்ஸ் என்பவர் இந்த பதக்கத்தை வடிவமைத்துள்ளார். பதக்கம் 375 முதல் 400 கிராம் எடை கொண்டதாக இருக்கும், இது 85 மில்லி மீட்டர் சுற்றளவையும், 7 மில்லி மீட்டர் அடர்த்தியையும் கொண்டதாகும்.
தங்கப்பதக்கம் என்பது முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல. அது 92.5 சதவீதம் வெள்ளி, 1.34 சதவீதம் தங்கம், 6.16 சதவீதம் செம்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தங்கப்பதக்கத்தில் குறைந்தது 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். வெள்ளிப்பதக்கம் 92.5 சதவீதம் வெள்ளி மற்றும் 7.5 சதவீதம் செம்பால் ஆனது. வெண்கலப்பதக்கத்தில் 97 சதவீதம் செம்பும் 2.5 சதவீதம் துத்தநாகமும் 0.5 சதவீதம் வெள்ளீயமும் இடம்பெற்றுள்ளது.
பதக்கத்தின் முன் பகுதியில் ஒரு போதும் மாற்றம் செய்யப்பட மாட்டாது. அதாவது கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி கோவிலில் இருந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் லண்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதி, ஒலிம்பிக் போட்டி சின்னம், ஒலிம்பிக் வளையம் உள்ளிட்ட அம்சங்களுடன் கண்ணை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment