மானை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 1988-ல் “ஹம் சாத்சாத் ஹைன்” என்ற படப்பிடிப்பில் இருந்த போது சல்மான்கான் இரு மான்களை சுட்டுக் கொன்றார்.
இதற்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சல்மான்கான் மீது வழக்கும் தொடரப்பட்டது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இவ்வழக்கை ராஜஸ்தான் ஐகோர்ட்டு தற்போது விசாரிக்க துவங்கியுள்ளது.
வனவிலங்குகள் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கும். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. சல்மான்கானுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என மும்பை பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். இதனால் சல்மான்கான் தவிப்பில் உள்ளார்.

No comments:
Post a Comment