தீ விபத்தில் பலியான 47 பேரின் உடல்களும் கருகிய நிலையில் காணப்பட்டதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. அதிகாலை 4 மணி அளவில் நடந்த தீ விபத்து பற்றி, தகவல் அறிந்ததும் உடனடியாக ஆந்திர மாநில ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. தீ விபத்து நடந்து 8 மணி நேரத்துக்கும் மேலாகியும், இன்று காலை வரை பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாமலேயே உள்ளது.
விபத்து நடந்த எஸ்-11 பெட்டியில் பயணம் செய்த வர்களின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டுள்ளனர். அவர்களிடம் ரெயில்வே போலீசார் பெட்டியில் பயணம் செய்தவர்களின் போட்டோக்களை கேட்டுள்ளனர். இந்த போட்டோக்களை வைத்து ஓரளவுக்கு அடையாளம் காண முடியும் என்று ரெயில்வே போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையத்தை தாண்டி வந்த பின்னர்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவே பலியானவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

No comments:
Post a Comment