திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட இயக்க கொள்கைகளையும், தனி ஈழத்து முழக்கத்தையும் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இயக்கம் ம.தி.மு.க. மட்டும்தான். மாற்று நிலைப்பாடு எடுக்காமல், என்றும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருப்போம் என்று உறுதியும் தரமுடியும். பிரபாகரனின் தாய் பார்வதியம்மாளை சிகிச்சைக்காக கூட தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாமல் தடுத்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவர் இப்போது டெசோ மாநாடு நடத்துகிறார். இது தமிழர்களை ஏமாற்றும் வேலை.
கூட்டணிக்காக சொற்ப இடங்களை பெறுவதற்காக காத்திருக்கும் இயக்கம் ம.தி.மு.க அல்ல. இயற்கை வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட போதும் தேர்தலில் பங்கேற்காமல் இருந்த காலங்களிலும் கூட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரு பெரும் ராட்சத பலம் கொண்ட கட்சிகளுக்கு நடுவே புதிய மாற்றத்தை ம.தி.மு.க.வால் உருவாக்க முடியும். அதற்கான புரட்சி மக்களிடம் கருக்கொண்டு உள்ளது.
அதற்காக மக்களை தயார்படுத்தும் பணியில் தான் இப்போது நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். ஊராட்சி அளவில் ம.தி.மு.க.செயலர்கள் நியமிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. இவ்வாறு நியமிக்கப்படுவோர் தங்களின் செல்போன் எண்களை எனக்கு தரவேண்டும். ஊடகங்களில் மக்கள் பிரச்சினைகளை பார்க்கும் போது அவர்களைதொடர்பு கொண்டு விளக்கம் கேட்கவும், வழிகாட்டவும் முடியும்.
கரூரில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி நடைபெற உள்ள மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தும் அதற்கான தூண்டு கோலாக ம.தி.மு.க. இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment