பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே தொடர்ந்து போராடி வருகிறார்.
டெல்லியில் பல கட்டங்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆதரவாக குழுவினரும், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும் போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து வருகிறது.
இதை கண்டித்து அன்னா ஹசாரே குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் டெல்லியில் 4 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
காலவரையற்ற உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே 4 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தபோது மத்திய அரசுக்கு கோரிக்கையை ஏற்க 4 நாள் கெடு விதித்தார். அதன்பிறகும் மத்திய அரசு கண்டு கொள்ளாவிட்டால் தானே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதிப்பேன் என்றும் எச்சரித்து இருந்தார்.
அவரது கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனால் மத்திய அரசு சார்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால் அன்னா ஹசாரே இன்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். இதற்காக அன்னா ஹசாரே ஜந்தர்மந்தர் வந்தார். மேடையில் அமர்ந்து காலை 10.30 மணிக்கு உண்ணா விரதம் தொடங்கினார்.
அங்கு ஏற்கனவே அவரது குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களும் இன்று 5-வது நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தார்கள்.
கடந்த 4 நாள் உண்ணாவிரதத்தில் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே பங்கேற்றனர். நேற்று யோகாகுரு பாபாராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அப்போது மைதானத்தில் கூட்டம் காணப்பட்டது.
அன்னா ஹசாரே உண்ணா விரதம் தொடங்கியதால் ஜந்தர் மந்தரில் ஆதரவாளர்கள் குவிந்தனர். தேசிய கொடியை பிடித்தவாறு அவர்கள் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சிறுவர்கள்- பெண்களும் கலந்து கொண்டனர். அன்னா ஹசாரே ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டது. படுத்த படுக்கையாக உண்ணாவிரதம் இருந்தார். டாக்டர்கள் வற்புறுத்தலால் அவர் போராட்டத்தை கைவிட்டார்.
எனவே உடல்நிலையை கருத்தில் கொண்டு அன்னா ஹசாரே, உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.
திட்டமிட்டப்படி இன்று உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னாஹசாரே குழுவினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
டெல்லியில் உண்ணாவிரதம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று அன்னாஹசாரே ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் வீட்டின் முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment