தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் பஸ் ஓட்டை வழியாக தவறி விழுந்த மாணவி பலியானாள். இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் ஈச்சம் பட்டு, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் பள்ளி வாகனங்களில் அடிபட்டு 2 மாணவிகள் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலில் பள்ளி வாகனத்தில் அடிபட்டு இன்றும் ஒரு குழந்தை உயிர் இழந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2) ஆகிய குழந்தைகள் உள்ளன. இவர்களில் சந்தோஷ், சுதாகர் ஆகியோர் திருமுல்லைவாயல் அரும்பாக்கத்தில் உள்ள லிட்டில் ஹோலிஏஞ்சல் மெட்ரிக்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்த 2 குழந்தைகளையும் அவரது தந்தை தனது மோட்டார்சைக்கிளில் பள்ளியில் கொண்டு விட்டு வருவார். தற்போது பள்ளி வேனுக்கு பணம் செலுத்தியதால் இன்று முதல் முறையாக 2 குழந்தைகளையும் வேனில் அனுப்பி வைக்க தயாராக இருந்தனர். காலை 8 மணி அளவில் வீட்டின் அருகே வேன் வந்தது. மீனா தனது மகன்கள் 1 1/2 வயது குழந்தை சஞ்சய்யை கீழே விட்டு விட்டு மற்ற சந்தோஷ், சுதாகர் ஆகியோரை வேனில் ஏற்றி விட்டார்.
குழந்தைகள் டாடா காட்டியதும் வேன் புறப்பட்டது. அப்போது சஞ்சய் தவழ்ந்தபடியே வேனில் கீழ் சென்று விட்டான். இதை கவனிக்காத டிரைவர் வேனை எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை வேனின் பின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தது.
இதை கவனித்த மீனா அய்யோ என் குழந்தை என்று அலறினாள். அருகில் நின்றவர்களும் அங்கு ஓடி வந்தனர். நிலைமை விபரீதம் ஆனததை அறிந்ததும் வேன் டிரைவர் மோகன் இறங்கி தப்பி ஓடி விட்டார். வேனில் இருந்த குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் கீழே இறக்கி விட்டனர். குழந்தை இறந்ததை அறிந்து ஆவேசம் அடைந்த பொதுமக்கள் வேனை அடித்து நொறுக்கினார்கள்.
தகவல் அறிந்ததும் ஆவடி உதவி போலீஸ் கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் தமிழ்வாணன், சிவக்குமார் ஆகியோர் அங்கு வந்தனர். குழந்தை உடல் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். நிலைமையை சமாளிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே பள்ளி வாகன விபத்தில் 3 குழந்தைகள் பலியான சோகம் அடங்குவதற்குள் மேலும் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி பலியாகி இருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments:
Post a Comment