குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பில், தருண்கிராந்தி விருதுகள் விழாவும் மதம் சார்ந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்- மந்திரி நரேந்திரமோடி, யோகா குரு பாபாராம்தேவ், காங்கிரஸ் எம்.பி. விஜய் தர்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியதாவது:-
குஜராத் அரசில் ஊழல் நடைபெறுகிறதா? எனப் பலரும் என்னைக் கேட்கின்றனர். நான் அறிந்த வரையில், இங்கு ஊழல் எதுவும் நடைபெற வில்லை. நரேந்திரமோடி எந்த தவறையும் செய்யவில்லை. அவர் நேர்மையாக செயல் படுவதால்தான், அங்கு ஊழலுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
ஊழல் நடைபெறாத வகையில், சிறந்த நிர்வாகத்தை நரேந்திர மோடி அளிக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த மந்திரிகள் சிலர் ஊழல் புகாரில் சிக்கி, சிறையில் இருந்துள்ளனர். அதே போன்று, நரேந்திர மோடியும் ஊழல் புகாரில் சிக்கியிருந்தால், அவரும் சிறைக்குள் இருந்திருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நரேந்திரமோடியை பாபா ராம்தேவ் புகழ்ந்து பேசியதற்கு, அன்னா ஹசாரே குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மோடி ஒரு கொலைகாரர். அவருடன் நாங்கள் ஒரு போதும் இணங்கிப் போனதில்லை. இப்போதும் அவருடன் நாங்கள் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ள வில்லை. மோடியுடன் மேடையில் தோன்றியது குறித்து, ராம்தேவ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே குழுவைச் சேர்ந்த சஞ்சய்சிங் தெரிவித்தார்.

No comments:
Post a Comment