சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூரில் தீப்பிடித்துக் கொண்டதில் 47 பேர் பலியாகினர். இதையடுத்து ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். இந்த விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து காரில் நெல்லூர் செல்கிறார் என்று கூறப்படுகிறது. இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
ஆந்திர முதல்வர் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார். ஆனால் கொடநாட்டில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நெல்லூர் செல்வாரா அல்லது அங்கிருந்து கொண்டே விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு அறிவிப்பாரா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment