பிரபு மகனை வாழ்த்த, ரஜினி வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
கும்கி இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது:
"விக்ரம் பிரபு யானையின் இரண்டு தந்தங்களை பிடித்தபடி, அதன் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்து, அந்த யானையை அவர் தாத்தா (சிவாஜி)யுடன் ஒப்பிட்டார்கள். அதே யானையை பிடித்துக்கொண்டுதான் நானும், ரஜினியும் உயரே வந்தோம். எங்களை தூக்கி விட்டது அந்த யானைதான்.
நான் ஒரு தந்தத்தையும், ரஜினி ஒரு தந்தத்தையும் பிடித்துக்கொண்டோம். சிவாஜி குடும்பத்தில் என்னையும் ஒரு மகனாக ஏற்றுக்கொண்டது, அவருடைய பெருமிதம். ராம்குமார், பிரபு இருவரும் என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது, எனக்கு பெருமை. அவர் (சிவாஜி) இல்லாதபோதும் எங்கள் உறவு தொடர்கிறது.
விக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து ராம்குமார், பிரபு மட்டுமல்ல, அவருடைய பெரியப்பா நானும் பெருமைப்படுகிறேன். விக்ரம் பிரபு முதல் படியில் அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார் என்றார்கள். அவர் அருவி மீது அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார். அந்த அருவியில் இருந்து கொட்டுவது, எங்கள் அன்பு.
இந்த படத்துக்கு மினிமம் கேரண்டி' கொடுக்கலாம். 'கர்ணன்' சாம்பிள் பார்த்தீங்கள்ல...
நியாயமான மனுஷன்...
இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின் செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்தது பாக்கியம்.
நான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம், என் குருநாதர் (சிவாஜி) இருந்தபோதே `தேவர் மகன்' படத்தின் மூலம் அவருக்கு சலாம் போட்டதுதான். அது நான் செய்த இன்னொரு பாக்கியம்,'' என்றார்.
No comments:
Post a Comment