லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் போட்டியின் நாக்-அவுட் சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடந்த குழுநிலை ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீராங்கனையான சாய்னா, பெல்ஜியம் வீராங்கனையான லியன்னே டானை எதிர்கொண்டார். வெறும் 24 நிமிடங்கள் மட்டுமே நடந்த இப்போட்டியில் 21-4, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் லியன்னேவை எளிதில் வீழ்த்தி, சாய்னா வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின்மூலம் நாக்-அவுட் சுற்றில் விளையாட சாய்னா தகுதி பெற்றுள்ளார். நாக்-அவுட் சுற்றில் 20-ம் நிலை வீராங்கனையான சீனாவின் யாவ் ஜீய்யுடன் சாய்னா மோதுகிறார்.
22 வயதான சாய்னா இன்றைய போட்டியில் களத்தில் சிறப்பாக செயல்பட்டு, லியன்னே மீது ஆதிக்கம் செலுத்தினார். அதிலும் முதல் செட்டை வெல்ல அவருக்கு வெறும் 9 நிமிடங்களே தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment