அகமதாபாத்தில் இன்று நடந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ், குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, லஞ்சப் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி எந்தவித தவறும் செய்யாதவர். அவர் லஞ்சக்கரை படாதவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
குஜராத்தில் லஞ்சம் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஒவ்வொருவரும் என்னிடம் கேட்டுவரும் நிலையில் அதுபோன்று எந்தவித முரண்பாடான போக்கும் என்னால் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் எந்தவொரு லஞ்சப் பிரச்சினையிலும் சிக்காத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி மந்திரிகள் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். நரேந்திர மோடி இதுபோன்று தவறுகள் செய்திருந்தால் நிச்சயம் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வைக்கப்பட்டிருப்பார் என்றும் பாபா ராம்தேவ் கூறினார்.
பிறகு நரேந்திரமோடி பேசும்போது,
பாபா ராம்தேவ் தேசிய நலனுக்காக சிறந்த சேவை செய்து வருகிறார். பசுக் கொலைகளை செய்வதை தடுப்பதற்கு குஜராத் அரசு சட்டமியற்றிவரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு கொள்கைகள் மூலம் அந்த செயலை ஊக்குவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பஞ்சாபில் பசுமை புரட்சியும் குஜராத்தில் வெள்ளை புரட்சியும் நடந்து இருக்கிறது. ஆனால் இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பசுக் கன்றுகளை கொள்ளும் நோக்கத்திற்காக ‘பிங்க்’ புரட்சி திட்டத்திற்கு ரூபாய் 50 கோடி நிதி அளிக்க உள்ளது என்றும் மத்திய அரசை நரேந்திர மோடி குறை கூறினார்.

No comments:
Post a Comment