தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் எஸ்-9 பெட்டியில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த அசோக் கூறியதாவது:-
நான் பெங்களூரில் இருந்து வியாபார விஷயமாக சென்னை வந்தேன். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எஸ்-9 கோச்சில் பயணம் செய்தேன். இன்று அதிகாலை 3.45 மணி அளவில் திடீர் என்று எல்லோரும் சத்தம் போட்டனர். ஒரு சர்தார்ஜி வந்து ரெயிலில் தீ பிடித்திருக்கிறது, எழுந்திருங்கள் என்று எழுப்பினார். உடனே அருகில் தூங்கியவர்களையும் தட்டி எழுப்பினோம். அதற்குள் ரெயில் நெல்லூர் அருகில் நின்று விட்டது.
நாங்கள் அவசரமாக கீழே இறங்கினோம். எஸ்-11வது பெட்டியில் பயங்கரமாக தீ எரிந்ததை பார்த்தோம். எங்களால் நெருங்க முடியவில்லை. எஸ்-11வது கோச் எரிந்த நிலையில் எஸ்-10வது பெட்டிக்குள்ளும் புகை சூழ்ந்தது. அந்த நொடியில்தான் பெட்டிக்குள் இருந்தவர்கள் பதட்டத்துடன் எழுந்து மற்றவர்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்து 16 மணி நேரத்துக்குப் பிறகுதான் ஆம்புலன்ஸ், போலீஸ் மற்றும் மீட்பு குழுவினர் வந்தனர். 5 மணிக்கு பிறகுதான் மீட்பு பணி வேகமாக நடந்தது. நாங்கள் உயிர் பிழைத்தது அதிசயம்தான்.
விஜயவாடாவில் இருந்து சென்னையில் கூலி வேலை செய்வதற்காக இதே ரெயிலில் உள்ள பொது பெட்டியில் பயணம் செய்த சித்தம்மா (45), பாப்பாராவ் (18) ஆகி யோர் கூறியதாவது:-
நாங்கள் 20 பேர் வேலைக்காக தமிழ்நாடு எக்ஸ்பிரசில் சென்னை வந்தோம். நாங்கள் பயணம் செய்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் திடீர் என்று ரெயிலில் தீப்பிடித்தது. எங்கள் பெட்டிக்குள்ளும் புகை சூழ்ந்தது. மூச்சு திணறல் ஏற்பட்டதால் உயிரை காப்பாற்ற ரெயிலில் இருந்து கீழே குதித்தோம். துணி மற்றும் உடமைகளை பற்றி கவலைப்படாமல் அதை பெட்டியிலேயே விட்டு விட்டோம்.
அண்ணாநகரை சேர்ந்த குந்தல்லால்ஷா (55) கூறியதாவது:-
நான் டெல்லி சென்று விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்-8 பெட்டியில் வந்தேன். அதிகாலை நேரத்தில் ரெயிலில் தீ என்று குரல் எழுப்பினார்கள். அப்போது நான் இருந்த பெட்டிக்கு பின்னால் உள்ள ஒரு கோச் தீப்பிடித்து எரிவதும் கரும்புகை சூழ்ந்ததும் தெரிந்தது. உடனே அனைவரும் கீழே இறங்கினோம்.
அப்போது ஒருவர் அவசர விளக்கை கொண்டு வந்தார். அந்த வெளிச்சத்தில்தான் எங்கள் உடமைகளை எடுத்து வந்தோம். குடிக்க தண்ணீர் இல்லாமல் 2 மணி நேரம் தவித்தோம்.
கோவில்பட்டி தபால் நிலையத்தில் வேலை பார்க்கும் பொன்னுசாமி, அந்தோணி, சாமிநாதன், சொக்கலிங்கம், வேல்முருகன் ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் டெல்லியில் நடந்த தபால் ஊழியர்கள் சங்க மாநாட்டில் கலந்து விட்டு இந்த ரெயிலில் சென்னை திரும்பினோம். எஸ்-9 பெட்டியில் பயணம் செய்தோம். இன்று அதிகாலை வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் எங்கள் பெட்டியில் இருந்து எஸ்-10 பெட்டியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அருகில் உள்ள பெட்டியில் தீப்பிடித்து புகை சூழ்ந்ததை பார்த்ததும் இந்தியில் கதறியபடியே வந்தார். அவர் என்ன சொல்கிறார் என்பது புரிய வில்லை. பதட்டத்துடன் அவர் பேசியதை பார்த்து ஏதோ ஆபத்து என்பதை தெரிந்து கொண்டோம்.
எழுந்து வெளியே சென்று பார்த்தபோது எங்களுக்கு பின்னால் உள்ள ரெயில் பெட்டி எரிந்து கொண்டு இருந்தது. ஒரே புகை மண்டலமாக தெரிந்தது. உடனே அனைவரும் பதட்டத்துடன் பெட்டியில் இருந்து வெளியே வந்து விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:
Post a Comment